போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில், இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கிருந்த இங்கிலாந்து பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் விரைவில் இங்கிலாந்திற்கு திருப்பி அனுப்பப்பட உள்ளார்.
68 வயதுடைய லின்செ சாண்டிஃபொர்ம் என்ற இங்கிலாந்து பெண்ணே, விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரோடு 35 வயதுடைய ஷஹாப் ஷஹாபாடி என்பவரும் இங்கிலாந்திற்கு திருப்பி அனுப்பப்பட உள்ளார்.
சாண்டிஃபொர்ம், 2012ஆம் ஆண்டு பாலிக்குச் சென்றார். அவரது பயணப் பெட்டியில் கொக்கெய்ன் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் மதிப்பு 2.14 மில்லியன் டொலர் ஆகும். சாண்டிஃபொர்ம் போதைப்பொருளைக் கடத்தியதை ஒப்புக்கொண்டார்.
சாண்டிஃபொர்முக்கு 2013ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று தம் மகனுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததால் அவ்வாறு செய்ததாக அவர் நிரூபித்தார். அதனையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.