இங்கிலாந்தில் சக மாணவனை கத்தியால் குத்திக் கொன்ற 15 வயது மாணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
15 வயதுடைய முகமது உமார் கான், சக மாணவர் ஹார்வி வில்கூஸ்ஸைக் (Harvey Wilgoose) கொன்றார்.
பெரும்பாலும் 18 வயதுக்குட்பட்டவர்களின் அடையாளம் வெளியிடப்படுவதில்லை. ஆனால், கத்திக்குத்துச் சம்பவங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முக்கியம் என்பதால் கானின் அடையாளத்தை வெளியிட நீதிபதி முடிவெடுத்தார்.
வேறு இரு மாணவர்களுக்கு இடையே நடந்த சண்டையில் ஹார்விக்கும் உமாருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததால், இருவரும் சமூக ஊடகங்கள் வாயிலாக சண்டையிடத் தொடங்கினர்.
இதனையடுத்து நேரில் சந்தித்தபோது உமார், ஹார்வியைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். மேலும், ஹார்வியைக் கொல்லும் எண்ணம் தனக்கு இல்லையென்று விசாரணையின்போது உமார் தெரிவித்துள்ளார்.
தான் ஒரு முன்கோபக்காரர் என பாடசாலையிலும் வீட்டிலும் துன்புறுத்தப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார். இதனால் அவர் ஹார்வியை ஆத்திரத்தில் சட்டென்று கத்தியால் குத்தியதாக கூறியிருக்கிறார்.