பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நீதிமன்றக் கட்டடத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்குப் பாகிஸ்தானின் தலிபான் பொறுப்பேற்றுள்ளது.
நீதிமன்ற அதிகாரிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அது அறிவித்தது. இத்தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்தனர்.
நீதிமன்றத்துக்குச் சென்றிருந்த பொதுமக்கள் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்ததாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
பத்தாண்டுகளில் முதன்முறையாக இஸ்லாமாபாத்தில் அத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது.
இவ்வாண்டு பாகிஸ்தானிய தலிபான் அந்நாட்டில் 600க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. அவற்றில் முக்கால்வாசி ஆப்கானிஸ்தான் எல்லை அருகிலிருக்கும் கைபர் பக்துன்குவா (Khyber Pakhtunkhwa) வட்டாரத்தில் நடத்தப்பட்டன.
அந்தக் குழுவுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் பிரிவு ஆதரவு அளித்து வருகிறது என்று பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியிருக்கிறது. அதை ஆப்கானிஸ்தான் நிராகரித்துள்ளது.
குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையில் கடும் மோதல் மூண்டது.