பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என்று கூறிய அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளது.
மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஹசீனா ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. கொலை, கொலை முயற்சி, சித்திரவதை மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தியது ஆகியவை அந்தக் குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
கடந்த 2024ஆம் ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டங்களை வன்முறையால் ஒடுக்கும்படி ஹசீனா உத்தரவிட்டிருந்தார் என்று கூறப்பட்டது. அதில் சுமார் 1,500 பேர் கொல்லப்பட்டனர்.
இன்றைய (17) வழக்கு விசாரணையில் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கலந்துகொள்ளவில்லை.
அவர் தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.