செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்தில் ஆடம்பர வீடுகளுக்கு கூடுதல் வரி விதிக்க முடிவு; 2028 ஏப்ரல் அமுலுக்கு வரும்!

இங்கிலாந்தில் ஆடம்பர வீடுகளுக்கு கூடுதல் வரி விதிக்க முடிவு; 2028 ஏப்ரல் அமுலுக்கு வரும்!

1 minutes read

இங்கிலாந்தில் 2 மில்லியன் பவுண்டுகளுக்கு அதிகமான மதிப்புடைய ஆடம்பர வீடுகளுக்கு கூடுதல் வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

2026ஆம் ஆண்டில் 2 மில்லியன் பவுண்டுகளுக்கு அதிகமான மதிப்புடைய வீடுகள் வைத்திருப்பவர்களுக்கு, 2028ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், கூடுதல் வரி விதிக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக எதிர்வரும் ஆண்டில், அரசு அமைப்பு ஒன்று வீடுகளின் மதிப்பைக் கணக்கிட உள்ளது.

அதைத் தொடர்ந்து, 2 முதல் 2.5 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய வீடுகள் வைத்திருப்போருக்கு ஆண்டொன்றிற்கு 2,500 பவுண்டுகளும், 5 மில்லியன் மற்றும் அதற்கு அதிக மதிப்புடைய வீடுகள் வைத்திருப்போருக்கு 7,00 பவுண்டுகளும் உப கட்டணம் விதிக்கப்படும்.

இந்த வரிவிதிப்பு 2028ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமுலுக்கு வரும். நாட்டில் நீண்டகாலமாக மக்களுடைய நிதி நிலைமையில் பெரும் வித்தியாசம் நிலவிவருகிறது. அதை எதிர்கொள்வதற்காகவே இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.