செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இலங்கை இளைஞன் மீது லண்டனில் 7 குற்றச்சாட்டுகள்; நீதிமன்றத்தில் மறுத்தார்

இலங்கை இளைஞன் மீது லண்டனில் 7 குற்றச்சாட்டுகள்; நீதிமன்றத்தில் மறுத்தார்

0 minutes read

இங்கிலாந்தில் புகலிட விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞன், மேற்கு லண்டனில் 15 வயது சிறுமியை கடத்தி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த நவம்பர் 1ஆம் திகதி மேற்கு லண்டனின் ஃபெல்தாம் பகுதியில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

20 வயதான யாஷின் ஹிமாசார, Isleworth Crown Court நீதிமன்றத்தில் வீடியோ இணைப்பு மூலம் முன்னிலையாகினார்.

சிங்கள மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் சாட்சியம் அளித்த அவர், கடத்தல், துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோக செயற்பாடு உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளிலும் தாம் குற்றமற்றவர் எனத் தெரிவித்தார்.

அரசாங்கத்தால் புகலிட கோருபவர்களை தங்க வைக்க பயன்படுத்தப்படும் மூன்று நட்சத்திர வசதியுடைய St Giles Hotel விருந்தகத்தில் அவர் வசித்து வந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஹிமாசாரவை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மேலதிக விசாரணைகள் 2026 ஏப்ரல் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More