செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் அலெக்ஸி நெவால்னி மரணம்: நச்சு இரசாயனம் செலுத்தப்பட்டதாக 5 ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டு

அலெக்ஸி நெவால்னி மரணம்: நச்சு இரசாயனம் செலுத்தப்பட்டதாக 5 ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டு

1 minutes read

ரஷ்யாவின் முக்கிய எதிர்த்தரப்புத் தலைவராக இருந்த அலெக்ஸி நெவால்னி மரணம் குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அவருக்கு சிறையில் நச்சு இரசாயனம் செலுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக ஐந்து ஐரோப்பிய நாடுகள், கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன.

இங்கிலாந்து, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டின் போது இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்டன. அதில், “Dart frog” எனப்படும் ஒரு வகை தவளையிலிருந்து பெறப்பட்ட நஞ்சு நெவால்னிக்கு செலுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் ரஷ்ய அரசாங்கமே முக்கிய பொறுப்புக்கூற வேண்டிய தரப்பாக கருதப்படுகின்றது என அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்து வந்த முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவராக நெவால்னி அறியப்பட்டவர்.

நெவால்னி உயிரிழந்தபோது அவர் 19 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்து கொண்டிருந்தார். இருப்பினும், அவரது மரணம் இயற்கையான காரணங்களால் ஏற்பட்டது என ரஷ்ய அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

ஆனால், நெவால்னிக்கு நச்சு வழங்க ரஷ்யாவிற்கு வாய்ப்பும் திறனும் இருந்ததாகவும், அதற்கான நோக்கமும் இருந்ததாகவும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் குற்றச்சாட்டில் வலியுறுத்தியுள்ளன.

அதேவேளை, ரஷ்யாவின் மீது அமெரிக்காவும் இதே குற்றச்சாட்டை தற்போது முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.