செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கு: ஹிலாரி கிளிண்டன் விசாரணை தற்காலிகமாக இடைநிறுத்தம்

ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கு: ஹிலாரி கிளிண்டன் விசாரணை தற்காலிகமாக இடைநிறுத்தம்

0 minutes read

மறைந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் நேற்று மூடிய கதவுகளுக்கு பின்னால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த விசாரணை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூடிய கதவுகளுக்கு பின்னால் நடைபெறும் இந்த விசாரணைகளின் போது புகைப்படம் எடுக்கவும், அவற்றை வெளியிடவும் விசாரணைக் குழு கடுமையான தடையை விதித்திருந்தது. இருப்பினும், நேற்றைய விசாரணையின் போது, கிளிண்டன் உள்ளே இருக்கும் புகைப்படம் சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்டது. அந்த பதிவில், “அவர்களின் குற்றச்செயல்கள் குறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை. எப்ஸ்டீனை நான் ஒருபோதும் சந்தித்ததாக நினைவில்லை” என்ற கூற்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணை இடைநிறுத்தப்பட்டதாகவும், கிளிண்டனின் சட்டத்தரணிகள் விவகாரத்தை மறுபரிசீலனை செய்த பின்னர் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.