சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
தாக்குதல் இடம்பெற்ற போது பலத்த வெடிப்புச் சத்தம் கேட்கப்பட்டதுடன், தூதரகக் கட்டடப் பகுதியில் இருந்து புகை எழுந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தூதரக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்குத் தக்க பதிலடி வழங்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பாதுகாப்பு காரணங்களால் ரியாத், தஹ்ரன் மற்றும் ஜித்தா நகரங்களில் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்கள் வீட்டிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தூதரகப் பகுதி தற்போது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.