செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் எப்ஸ்டீன் தொடர்புகள் காரணமாக இளவரசர் பட்டம் பறிக்கப்பட்ட ஆண்ட்ரூக்கு மிரட்டல்: ஒருவர் கைது

எப்ஸ்டீன் தொடர்புகள் காரணமாக இளவரசர் பட்டம் பறிக்கப்பட்ட ஆண்ட்ரூக்கு மிரட்டல்: ஒருவர் கைது

1 minutes read

நார்ஃபோக் (Norfolk) பகுதியில் உள்ள சாண்டிரிங்ஹாம் எஸ்டேட் அருகே ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சரை மிரட்டியதாகக் கூறப்படும் நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதன்கிழமை இரவு 7:30 மணியளவில் உல்ஃபெர்டன் (Wolferton) பகுதியில் ஒரு நபர் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகக் கிடைத்த தகவலையடுத்து, நார்ஃபோக் பொலிஸார் அவரை உடனடியாகக் கைது செய்தனர்.

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் தனது நாய்களுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த நபர் ஒருவரால் மிரட்டப்பட்டார் என்றும், அதன் விளைவாக அவர் தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் காரை நோக்கித் தப்பிச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் சாண்டிரிங்ஹாம் எஸ்டேட்டில் உள்ள மார்ஷ் ஃபார்ம் (Marsh Farm) பகுதிக்கு அருகே நடந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் சஃபோல்க் (Suffolk) மாகாணத்தின் ஸ்டோவ்மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த 39 வயதான அலெக்ஸ் ஜென்கின்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது “பிறரைத் துன்புறுத்தும் அல்லது அச்சுறுத்தும் வகையில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துதல் அல்லது நடந்து கொள்ளுதல் (இரண்டு வழக்குகள்)” மற்றும் “காவல்துறையினரிடம் பரிசோதனைக்காக இரத்த மாதிரியை வழங்க மறுத்தல்” ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மறைந்த குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடனான தொடர்பு காரணமாக விண்ட்சரில் உள்ள ராயல் லாட்ஜிலிருந்து வெளியேறிய பிறகு, ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் இங்கு குடிபெயர்ந்தார்.

மேலும், எப்ஸ்டீன் உடனான தொடர்புகள் காரணமாக கடந்த ஆண்டு இறுதியில் மன்னரால் இவருடைய இளவரசர் பட்டம் மற்றும் ‘டியூக்’ (Duke) அந்தஸ்து பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.