செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் உக்ரைன் இராணுவத்தில் அதிரடி மாற்றம்: புதிய தலைமைத் தளபதி நியமனம்!

உக்ரைன் இராணுவத்தில் அதிரடி மாற்றம்: புதிய தலைமைத் தளபதி நியமனம்!

1 minutes read

ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பிறகு உக்ரைன் இராணுவத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தலைமை மாற்றமாக, 43 வயதான ஜெனரல் மிகாய்லோ டிராபதி நாட்டின் புதிய தலைமைத் தளபதியாக ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி நியமித்துள்ளார்.

60 வயதான முன்னாள் தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அவரது இடத்தை ஜெனரல் டிராபதி பொறுப்பேற்கிறார்.

உக்ரைன் இராணுவத்தில் திறமையான மற்றும் அனுபவமிக்க தளபதியாகக் கருதப்படும் டிராபதி, 2024 முதல் 2025 வரை உக்ரைனின் தரைப்படைப் பிரிவின் தளபதியாக பணியாற்றியவர். போர்க்கள அனுபவம் மற்றும் நவீன இராணுவ உத்திகளில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது.

இந்த தலைமை மாற்றம், பாதுகாப்புத் துறையில் ஏற்பட்ட அண்மைய அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, பாதுகாப்பு அமைச்சராக இருந்த மிகாய்லோ பெடோரோவ் பதவியிலிருந்து திடீரென நீக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்திருந்தன.

அதேவேளை, நவீன தொழில்நுட்பம், ட்ரோன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த போர் உத்திகளை ஆதரிக்கும் புதிய தலைமுறை இராணுவ அதிகாரிகளுக்கும், பாரம்பரிய போர் முறைகளை முன்னிறுத்தும் மூத்த அதிகாரிகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளின் பிரதிபலிப்பாகவும் இந்த நியமனம் பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனின் அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கைகளில் இந்த தலைமை மாற்றம் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.