செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். எம்.பி. இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய பிடியாணை – கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

யாழ். எம்.பி. இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய பிடியாணை – கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

0 minutes read

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (24) பிடியாணை பிறப்பித்துள்ளது.

கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும், வழக்கு விசாரணைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அதேபோல், அவருக்காக பிணை வழங்கியிருந்த பிணையாளர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகாததாக நீதிமன்றத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜராகாததற்கான போதுமான காரணம் முன்வைக்கப்படாத நிலையில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்குடன் தொடர்புடைய மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடரவுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.