செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் செயற்கை நுண்ணறிவு தலைவர்களுடன் மன்னர் சார்லஸ் தலைமையில் ஸ்கொட்லாந்தில் உச்சிமாநாடு

செயற்கை நுண்ணறிவு தலைவர்களுடன் மன்னர் சார்லஸ் தலைமையில் ஸ்கொட்லாந்தில் உச்சிமாநாடு

0 minutes read

மனிதகுலத்தின் நன்மைக்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவுத் துறை தலைவர்களுடன் மன்னர் சார்லஸ் ஒரு விசேட உச்சிமாநாட்டை ஸ்கொட்லாந்தில் நடத்தவுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு மேம்பாடுகள் மனித கண்ணியத்தை நிலைநிறுத்துவதையும், உலக சமூகங்களுக்குப் பயனளிப்பதையும் உறுதி செய்யும் வகையில் டிச்லி அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட சாசனத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்வதே, இம்மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.

செயற்கை நுண்ணறிவின் அதிவேக வளர்ச்சி குறித்த அச்சங்கள் எழுந்துள்ள நிலையில், இந்தத் துறை தனது மேம்பாட்டு வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டாரியோ அமோடி தெரிவித்துள்ளார். சைபர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் குறித்த கவலைகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, எலான் மஸ்க் மற்றும் சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப பிரமுகர்களும் இந்த வேகக் குறைப்பு அழைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.