செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா முகப்பரு மற்றும் அதன் வடுக்களை நீக்கும் க்ரீம் – கடுமையான சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளான சிறுமி!

முகப்பரு மற்றும் அதன் வடுக்களை நீக்கும் க்ரீம் – கடுமையான சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளான சிறுமி!

1 minutes read

கேரள மாநிலத்தில் 17 வயது சிறுமி ஒருவர் பயன்படுத்திய அழகு சாதனப் பொருளால் அவருக்குக் கடுமையான சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இணையங்களில் வைரலாகி வரும் பல அழகு சாதன பொருட்களின் தரநிலைகளை ஆராயாமல் பலர் வெறுமனே வெண்மையாக்கும் க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். இதன் எதிரொலி பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுகிறன.

இவ்வாறுதான் கேரளாவில் சிறுமி ஒருவர் முகப்பரு மற்றும் அனால் ஏற்படும் வடுக்களை நீக்கும் முகமாக சந்தையில் இருந்து க்ரீம் ஒன்றை கொள்வனவு செய்து பயன்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் உடல் வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது சிறுநீரகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளனர். சம்பந்தப்பட்ட அந்த களிம்பை சோதனை செய்ததில், அதில் பாதுகாப்பான அளவை விட 12,500 மடங்குக்கும் அதிகமான பாதரசம் Mercury இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தோல் வழியாக உடலுக்குள் நுழைந்த இந்த நச்சுப் பாதரசம், சிறுநீரகச் செயலிழப்பு அபாயத்தை ஏற்படுத்தியது. சுமார் ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு அவர் தற்போது வீட்டில் குணமடைந்து வருகிறார்.

சமூக ஊடகங்களில் தவறான மற்றும் தரம் குறைந்த அழகு சாதனப் பொருட்களை சந்தைப்படுத்துவது குறித்து இந்தச் சம்பவம் இந்தியாவில் மீண்டும் ஒருமுறை சூடான விவாதத்தைத் தூண்டியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.