கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தது:சீனா

கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவத் தொடங்கிய ஹூபே மாகாணத்தில் அதன் தாக்கம் கட்டுக்குள் வந்திருப்பதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் உயிரிழப்புக்கும், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படவும் காரணமாக உள்ள கொரோனா வைரஸ் ஹூபே மாகாணத்தின் வூகான் நகரில் இருந்தே பரவியது. நோய்த்தொற்று ஏற்பட்ட பின்னர் அந்த நகரில் சீன அதிபர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலை கணிசமான அளவில் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், வைரஸ் பரவலின் தீவிரப் போக்கைக் குறைத்து, நிலைமையை மாற்றியமைப்பதில் முதல்கட்ட வெற்றியை அடைந்துள்ளதாகவும் ஜின்பிங் குறிப்பிட்டார்.

ஆசிரியர்