சீனாவிலுள்ள 97% நிறுவனங்கள் இயங்கத் துவங்கியுள்ளன!

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் வுஹான் நகரத்தில்  2 மாதங்களுக்குப் பிறகு பேரங்காடிகள் ( Shooping Mall ) திறக்கப்பட்டதாக  நேற்று சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பேரங்காடிகளுக்கு வருபவர்களின் உடல்நிலையை நுழைவாயில்களிலேயே ஸ்கேன் செய்து திருப்திகரமானது என உறுதி செய்த பின்னரே அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சீனாவிலுள்ள பெரிய நிறுவனங்கள் சுமார் 97% மீண்டும் இயங்கத் துவங்கி விட்டதாகவும்,  90%  வேலையாளர்கள் வேலைக்குத் திரும்பி விட்டதாகவும் சீனாவின் தொழில்துறை பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் பாதிப்பால் நேற்று அமெரிக்கா ஊரடங்கு சட்டத்தை நீட்டித்துள்ள நிலையில், சீனா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதாக அறிவித்துள்ளது.
-வணக்கம் இலண்டனுக்காக ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

ஆசிரியர்