செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா மூட நம்பிக்கை: தங்கள் தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுத்த தம்பதி

மூட நம்பிக்கை: தங்கள் தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுத்த தம்பதி

1 minutes read

இந்தியா – குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள விஞ்சியா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஹேமுபாய் மக்வானா (வயது 38) மற்றும் ஹன்சா பென் (வயது 35) தம்பதி, கடந்த ஓராண்டு காலமாக தங்கள் குடிசையில் நாள்தோறும் மாந்திரீக பூஜைகளை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை அன்று ஹோம குண்டத்தில் நெருப்பு வளர்த்து பூஜை செய்த இந்த தம்பதி, மறுநாள் காலை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த பொலிஸார் ஆய்வு செய்த போது, இவர்கள் தங்கள் தலையை தாங்களே வெட்டி நரபலி கொடுக்கும் விதமாக இயந்திரம் ஒன்றை உருவாக்கி, வீட்டருகே வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவ நாள் அன்று ஹோமம் வளர்த்து அந்த இயந்திரத்தில் தம்மை தாமே நரபலியாகியுள்ளனர்.

மேலும் இவர்கள் உயிரிழந்த இடத்தில் இருந்து தற்கொலை கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், தங்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோரை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என உறவினர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இதுபோன்ற மூடநம்பிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று சமூக நல நிபுணர்கள் மற்றும் மத நிபுணர்களும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.