செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்கனடா தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு | கனடா

தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு | கனடா

0 minutes read

பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் நேற்று முன்தினம் மாலை சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மனமுருகி பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர்.

பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி தேவாலயத்துக்குள் நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 78 வயதான முதியவரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து, அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் தேவாலயத்தில் இருந்த அனைவரும் அவரை சுற்றி வளைத்து மடக்கினர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.