October 4, 2023 5:17 am

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த சீனா ஆர்வம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பில் தீர்மானத்தில் சீனா மற்றும் பெலாரஸ் தலைவர்கள் தங்கள் “அதிக ஆர்வத்தை” வெளிப்படுத்தியுள்ளனர்.

ரஷ்யாவின் விளாடிமிர் புட்டினின் நெருங்கிய கூட்டாளியான சீன அதிபரும் பெலாரஸ் தலைவருமான அலெக்சாண்டர் லுகாஷென்கோ பெய்ஜிங்கில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிக்கையை வெளியிட்டார்.

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பெய்ஜிங் திட்டத்தை, தனது நாடு “முழுமையாக ஆதரிக்கிறது” என்று லுகாஷென்கோ கூறினார்.

தேசிய இறையாண்மைக்கு மதிப்பளித்து, அமைதிப் பேச்சுவார்த்தைக்கான திட்டத்தை சீனா கடந்த வாரம் அறிவித்தது.

அத்துடன், சீனா தனது உயர்மட்ட இராஜதந்திரி வாங் யியை புட்டினைச் சந்திக்க அனுப்பிய சில நாட்களுக்குப் பிறகு பெலாரஸ் தலைவரின் இந்தப் பயணம் முன்னெடுக்கப்பட்டது.

புதன்கிழமை நடைபெற்ற இந்தச் சந்திப்பில், சீனாவும் பெலாரஸும் மோதல் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதுடன், “உக்ரைனில் விரைவில் அமைதியை நிறுவுவதில் தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்தியது” என்று பெலாரஸ் அரசு நடத்தும் செய்தி நிறுவனமான பெல்டா தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்