கேரளாவில் முழு ஊரடங்கு!

கேரளாவில் எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

இது குறித்து கேரள அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் ஊரடங்கு கடுமையாக்கப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கேரளமாநிலத்தில் ஜிகா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை 23 பேர் ஜிகா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இது குறித்து ஆய்வு செய்ய மத்திய மருத்துவ நிபுணர் குழு கேரளாவில் முகாமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்