Friday, September 17, 2021

இதையும் படிங்க

வடக்கில் இம்மாதம் இதுவரை 230 பேர் கோவிட் தொற்றால் பலி!

செப்டெம்பர் மாதத்தின் முதல் 16 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்து 865 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38.2 கோடியை தாண்டியது!

வாஷிங்டன்,உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன்...

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது தொடர்ச்சியாக...

சமூக இலக்கியப் போராளி நந்தினி சேவியர் | செல்லத்துரை சுதர்சன்

அஞ்சலிக் குறிப்பு நள்ளிரவில் முருகபூதி அண்ணரின் திடீர் அஞ்சல் செய்தி என்னை அதிர்ச்சியுறச் செய்தது. ‘சேவியர் அங்கிள்’ என்று...

எழுத்தாளர் ஃப்ரான்சிஸ் கிருபா மறைந்தார்! படைப்பாளிகள் இரங்கல்!!

கவிஞரும், எழுத்தாளரும், திரைப்பட பாடலாசிரியருமான ஃபிரான்சிஸ் கிருபா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு கவிஞர்களும், எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை – சுவிட்சர்லாந்துக்கு இடையில் மீண்டும் நேரடி விமான சேவை

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்த விமான சேவையை சுவிஸ் சர்வதேச விமான...

ஆசிரியர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம் 13 பிரச்னைகளை வெளிப்படுத்த திமுக முடிவு!

புதுடெல்லி: மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில், நீட் தேர்வு ரத்து, கர்நாடகாவின் மேகதாது அணை திட்டம், தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி விநியோகிப்பதில் ஒன்றிய அரசு காட்டி வரும் பாரபட்சம் உட்பட 13 முக்கிய பிரச்னைகள் கிளப்ப திமுக திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து விவாதிப்பதற்காக நோட்டீஸ் கொடுத்துள்ளது. நாட்டில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தவறியது, தடுப்பூசி பற்றாக்குறை, அதன் விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இது, ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இரு அவைகளும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட ஒன்றிய அமைச்சரவையில் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களை, முதல் நாளில் பிரதமர் மோடி அவை உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். தொடர்ந்து, 17 புதிய மசோதாக்களை ஒன்றிய அரசு தாக்கல் செய்கிறது. இவற்றில் 3 மசோதாக்கள் அவசர சட்டங்களுக்கு மாற்றாக தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த தொடரில் ஒன்றிய அரசுக்கு எதிராக பல முக்கிய பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் கிளப்ப உள்ளன.

குறிப்பாக, கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு மற்றும் ஒன்றிய அரசின் தவறான மேலாண்மை, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி நிறுவனங்களுடன் கூடுதல் விலைக்கு புதிய ஒப்பந்தம், ரபேல் விமான பேர ஊழலில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவை கூட்டுவது, வேளாண் சட்டங்களை ரத்து செய்வது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சீனா உடனான எல்லை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், இந்த தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்பதால், அவை சுமூகமா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது பற்றி விவாதிப்பதற்காக டெல்லியில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

திமுக சார்பில் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலுவும், எம்பி திருச்சி சிவாவும் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பிறகு டி.ஆர்.பாலு அளித்த பேட்டி வருமாறு: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது நீட் தேர்வு ரத்து, மேகதாது அணை திட்டம், விலைவாசி உயர்வு, கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை, எல்லை பிரச்னை, மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு, வேளாண் சட்டங்கள், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, நியூட்ரினோ திட்டம், மின்சார திருத்த சட்டம், பெண்கள் இடஒதுக்கீடு, ஸ்டேன் சாமியின் மரணம் உப்பட 13 முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் 31 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. கூட்டத் தொடர் மிகவும் குறைவான நாட்கள் நடைபெறும் நிலையில், இது எப்படி சாத்தியமாகும் என திமுக சார்பில் கேள்வி எழுப்பி உள்ளோம்.

மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டாது என்பதை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதிப்படுத்தி தெரிவிக்க வேண்டும். ஏனெனில், கர்நாடகா அமைச்சரிடம் ஒரு பதிலையும், தமிழக அமைச்சரிடம் ஒரு பதிலையும் ஒன்றிய அரசு தெரிவித்து வருவதால், இந்த விவகாரத்தை கண்டிப்பாக தெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர, கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள நாடு முழுவதும் மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அதற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் மக்கள் தொகையை 6 கோடி என்று வைத்துக் கொண்டால் கூட, 12 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படுகிறது. ஆனால், தற்போது வரை 1.75 கோடி தடுப்பூசிகளை தான் ஒன்றிய அரசு கொடுத்துள்ளது. அதனால், தடுப்பூசி விநியோகம் பற்றி ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்துக்கு தடுப்பூசி வழங்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டப்படுகிறது. அதனால், உடனடியாக மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 • கொரோனா தொற்று அச்சுறுத்தல் இருப்பதால் நாடாளுமன்ற வளாகத்தில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
 • அவைக்கு வரும் அனைத்து உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், நெகட்டிவ் என வந்தவர்கள் மட்டுமே கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர்.
 • இரு அவைகளிலும் சமூக இடைவெளியுடன் எம்.பி.க்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
 • தற்போது, மக்களவையில் உள்ள 539 உறுப்பினர்களில் 280 எம்பி.க்கள் மட்டுமே இருக்கைகளில் அமர வைக்கப்படுகிறார்கள். மீதமுள்ள 259 எம்பி.க்கள் பார்வையாளர்கள் மாடத்தில் அமர வைக்கப்படுவார்கள்.
 • இதன் காரணமாக பாராளுமன்ற கூட்டத்தொடரை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
 • இதுவரை மக்களவையில் 444 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 218 உறுப்பினர்களும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டுள்ளனர்.
 • ஆரோக்கியமான விவாதத்துக்கு தயார்
  மழைக்கால கூட்டத் தொடர் சுமூகமாக நடத்து குறித்து விவாதிக்க, டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று கூட்டினார். இதில் பேசிய பிரதமர் மோடி, பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆரோக்கியமான விவாதங்கள் நடத்துவதற்கு ஒன்றிய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
 • நாடாளுமன்ற முற்றுகை விவசாயிகள் திட்டம்
  மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லி எல்லையில் 100 நாட்களை கடந்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய

இதையும் படிங்க

லொஹான் ரத்வத்தவின் விவகாரத்தில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் விவகாரம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எனத் தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இதுதொடர்பான விசாரணைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அமெரிக்க மருத்துவ பீட பழைய மாணவர்களால் தகவல் தொழிநுட்ப கூடம் கையளிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்புடன், மருத்துவ பீட பழைய மாணவர்களால் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கையளிக்கப்பட்ட தகவல் தொழிநுட்ப கூடத்தின் திறப்பு...

மதுபானசாலைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்?

நாட்டில் இன்று முதல் மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான போலி செய்தியை அடுத்து நாட்டின் பல பாகங்களிலும்  உள்ள மதுபானக் கடைகளின் முன் பொது மக்கள் மதுபானம்...

மற்றுமொரு தலிபான் ராஜ்ஜியம் உருவாக அனுமதி இல்லை!

மற்றுமொரு பாகிஸ்தான் மற்றும் தலிபான் ராஜ்ஜியம் உருவாக மேற்கு வங்கம் எப்போதும் அனுமதிக்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க...

யாழில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர்.

உள்ளூராட்சி தேர்தல் : வேட்பு மனுத்தாக்கல் குறித்த அறிவிப்பு!

விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவோர் நாளைய தினம் (சனிக்கிழமை) வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர்,...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

உள்ளூராட்சி தேர்தல் : வேட்பு மனுத்தாக்கல் குறித்த அறிவிப்பு!

விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவோர் நாளைய தினம் (சனிக்கிழமை) வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர்,...

சூடுபிடிக்கும் ஐபிஎல் 2021: சென்னை அணியின் டூப்பிளசிஸ், பிராவோ, தாஹிர் துபாய் வந்தனர்!

துபாய்ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி 14-வது சீசனின் 2-வது பாதி போட்டி தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் டூப்பிளசிஸ், ஆல்ரவுண்டர் டுவைன்...

அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38.2 கோடியை தாண்டியது!

வாஷிங்டன்,உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன்...

மேலும் பதிவுகள்

பிரதமர் மஹிந்தவுக்கு இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் வாழ்த்து தெரிவிப்பு!

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இத்தாலி மக்கள் ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சூழ்ந்து, வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜி 20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

உண்மையான முத்து, வைர,பவள கற்களை கண்டறிவது எப்படி தெரியுமா?

மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும். https://youtu.be/ZtUKYwUjOhY

இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா!

ஆப்கான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடமாடும் தீவிரவாதிகளின் மீது தாக்குதல் நடத்த இந்தியாவின் உதவியை அமெரிக்கா கோரியுள்ளது. குறித்த தீவிரவாதிகள் மீது ட்ரோன் மூலமாக...

நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுகிறாரா?

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மத்திய...

அடிப்படைவாதம் மற்றும் அதனோடு இணைந்த வன்முறைகள் மிக்க சவாலான யுகத்தில் நாம்!

அடிப்படைவாதம் மற்றும் அதனோடு இணைந்த வன்முறை எமது யுகத்தில் எதிர்கொள்ள நேர்ந்துள்ள பாரதூரமான சவாலாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் மற்றும் அவர்களது நோக்கம் எதுவாயினும் பயங்கரவாத...

தமிழ் அரசியல்வாதிகள் விடுதலை அரசியலை மேற்கொள்வதாக தெரியவில்லை!

தமிழ் அரசியல்வாதிகள் எவரும் உண்மையான தமிழ்த்தேசிய விசுவாசத்தில் விடுதலை அரசியலை மேற்கொள்வதாக எமக்கு தெரியவில்லை என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

லொஹான் ரத்வத்தவின் விவகாரத்தில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் விவகாரம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எனத் தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இதுதொடர்பான விசாரணைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மெய்வல்லுநர் : இரண்டாம் கட்டப் போட்டி பிற்போடப்பட்டது

99 ஆவது ‍தேசிய மெய்வல்லுநர் விளையாட்டு விழா அடுத்த மாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம்  திகதிகளில் நடத்த இலங்கை மெய்வல்லுநர்...

துயர் பகிர்வு