செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

1 minutes read

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாட்டில் அக்டோபர் 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தமிழக நீர் நிலைகள் ஒரு பக்கம் வேகமாக நிரம்பினாலும், விளை நிலங்களுக்குள் வெள்ள நீர் பாய்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்க கடலில் நவம்பர் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் உருவாகவுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தெற்கு ஆந்திரா – வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக வட தமிழகம், புதுவை, காரைக்காலில் மிதமான மழை பெய்யும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். தென்மேற்கு வங்கக் கடல், தமிழக கடற்கரைப் பகுதி, அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதனையடுத்து, மீட்புப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நோய் தடுப்பு, வெள்ள அபாயம், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, உணவு வழங்குவது குறித்து காணொலிக் காட்சி மூலம் துறை செயலர்களுடன் ஆலோசித்து வருகிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.