67 ஆண்டுகள் ; “கார்ன்வால் கோமகள்”ஆனார் சார்லஸ்சின் மனைவி

இளவரசர் பிலிப் இங்கிலாந்தில் 67 ஆண்டு காலம் வகித்து வந்த ராணுவ பொறுப்பை தனது மருமகளும், இளவரசர் சார்லஸ்சின் மனைவியுமான கமிலாவிடம் ஒப்படைத்தார்.

இங்கிலாந்து நாட்டில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் (வயது 99), எடின்பரோ கோமகன் என்று அழைக்கப்பட்டு வந்தார். அந்த அடிப்படையில் அவர் 67 ஆண்டு காலமாக இங்கிலாந்து ராணுவத்தின் மிகப்பெரிய காலாட்படையான ரைபிள் படையின் தலைமை கர்னல் என்ற ராணுவ பொறுப்பை வகித்தார். கடந்த 2017-ம் ஆண்டு வயோதிபத்தின் காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து இளவரசர் பிலிப் ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விண்ட்சர் கோட்டையில் நடந்த ராணுவ விழாவில் அவர் ராணுவ பொறுப்பில் இருந்தும் முறைப்படி விலகினார். அந்த பொறுப்பை அவர் தனது மருமகளும், இளவரசர் சார்லஸ்சின் மனைவியுமான கமிலாவிடம் ஒப்படைத்தார். கமிலா, கார்ன்வால் கோமகள் என்று அழைக்கப்படுகிறார். இந்த விழா, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமனித இடைவெளியை பின்பற்ற ஏற்ற வகையில் எளிமையாக நடைபெற்றது.

ஆசிரியர்