உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் முஸ்­லிம்­களின் மத ஸ்­த­லங்­க­ளையும் அவர்­க­ளது சொத்­து­க­ளையும் சேதப்­ப­டுத்­தி­ய­வர்கள் இன்று முஸ்லிம்­க­ளி­டத்தில் வந்து வெட்­க­மற்ற முறையில் வாக்­கு­க் கேட்க முனை­கின்­றனர். ஒரு போதும் உண்­மை­யான முஸ்­லிம்கள் இதனை அங்­கீ­க­ரிக்­க­ மாட்­டார்கள் என்று ஐக்­கிய தேசிய கட்­சியின் பிரதித் தலை­வரும் வீட­மைப்பு, நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் பயங்­க­ர­வா­தி­க­ளால் மேற்­கொள்­ளப்­பட்ட  கத்­தோ­லிக்க மத வழி­பாட்டுத் தலங்­களின் மீதான தாக்­குதல் சம்­ப­வத்­தை­ய­டுத்து முஸ்லிம் பிர­தே­சங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட வன்­முறைச் சம்­ப­வத்­தினால் சேத­ம­டைந்த பள்­ளி­வா­சல்­களைப் புன­ர­மைப்பு செய்­வ­தற்­காக வேண்டி காசோ­லைகள் வழங்கும் நிகழ்வு புத்­தளம் மொஹிதீன் ஜும்ஆ பள்­ளி­வா­சலில் (பெரியபள்ளி) தலைவர் பீ.எம்.ஏ.ஜனாப் தலை­மையில்  நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்­ற­போது இதில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இந்நிகழ்வில் அமைச்­சர்­க­ளான ஏ.எச்.எம்.ஹலீம், பிரதி அமைச்சர் திலிப் வெத­ஆ­ராச்சி, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஏ.எச்.எம்.பௌஸி, பாலித ரங்க பண்­டார, ஹெக்டர் அப்­பு­ஹாமி, முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம். நவவி, டாக்டர் இல்யாஸ், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்­பினர் எஸ்.எச்.எம். நியாஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் புத்­தளம் மாவட்ட அமைப்­பாளர் அலி சப்ரி ரஹீம், ஐக்­கிய தேசிய கட்சி கற்­பிட்டி அமைப்­பாளர் எம்.என்.எம்.நஸ்மி உட்­பட பலரும் கலந்து கொண்­டனர்.

 மேலும் அமைச்சர் சஜித் பிரே­ம­தாச தம­து­ரையில்  கூறு­கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லை­ய­டுத்து இந்த நாட்டில் இன­ ரீ­தி­யி­லான மோதல்­களை தோற்­று­விக்கும் வகையில் செயற்­பட்ட இன­வா­திகள் அவர்கள் எதிர்­பார்த்த இலக்கை அடைந்து கொள்ள முடி­யாது போனது. நாட்­டையும் மக்­க­ளையும் நேசிக்கும் பெரும்­பா­லான சிங்­கள,தமிழ்,முஸ்லிம் மக்கள் நாடு தீப்­பற்றி எரியும் நிலை­யை ஏற்­ப­டுத்­த­வி­டாமல் தடுத்­ததை நினை­வு­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது.

குறிப்­பாக இலங்­கையின் அர­சியல் அமைப் பின் 9ஆவது பிரிவில் பௌத்த ­ம­தத்­துக்கு முத­லிடம் கொடுக்­கப்­பட்­டுள்­ள­துடன் இதனை பாது­காப்­பதும் எமது அனை­வ­ரதும் பொறுப்­பாகும். அது மட்­டு­மல்ல 14 ஆம் பிரிவில் அதே போன்று ஏனைய மதங்­க­ளுக்கு கொடுக்­கப்­பட்­டுள்ள பாது­காப்­பையும், உரி­மை­யையும் வழங்க வேண்டும் என்­பதில் நான் உறு­தி­யான நிலைப்­பாட்­டுடன் இருக்­கின்றேன். புத்­த­பிரான் போதித்த தர்­மத்­துக்கு அமை­வாக சக­லரும் சம­மாக வாழ வேண்டும் என்ற நிலைப்­பாட்­டை நாம் எம்மில் ஏற்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்.

சத்­தி­யத்தைப் புரிந்துகொள்ளும் காலம் தற்­போது ஏற்­பட்­டுள்­ளது. யதார்த்­தத்தை புரிந்து அனை­வரும் ஒற்­று­மை­யுடன் செயற்­பட வேண்­டி­யுள்­ளது. மத ரீதி­யா­னதும் இன ­ரீ­தி­யா­ன­து­மான அடிப்­ப­டை­வாதச் செயற்­பா­டு­க­ளுக்கு எமது நாட்டில் இனி இடம் கொடுக்க முடி­யாது.

நாட்டில் ஏதா­வது வடிவில் மதங்­க­ளுக்­குள்ளும், நாட்­டுக்­குள்ளும் அடிப்­ப­டை­வாதம் எங்­கா­வது காணப்­படும் என்றால் அதனை ஒழித்தே ஆக வேண்டும். இது­மட்­டு­மல்­லாமல் பயங்­க­ர­வா­தத்­துக்கும் இனி எமது நாட்டில் இடம் கொடுக்க முடி­யாது என்­பதை சுட்­டிக்­காட்­டு­வ­துடன், எவ்­வாறு பௌத்த விகா­ரை­களை நாங்கள் பாது­காக்க நட­வ­டிக்­கை­யெ­டுக்­கின்­றோமோ அதே போன்று எமது நாட்டிலுள்ள அனைத்து ஏனைய மத ஸ்­த­லங்­க­ளையும் நாம் பாது­காப்­ப­தற்­கான உறு­தி­யை வழங்குகின்றேன் என்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச கூறினார்.அமைச்சர் சஜித் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு வருகை தருவதை முன்னிட்டு, அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நிகழ்வுக்கு வருகை தந்த ஊடகவியலாளர்கள் உட்பட அனைவரும் கடும் சோதனைக்குப் பின்னரே பள்ளிவாசலினுள் செல்ல அனுமதிக் கப்பட்டனர்.