செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருக்கேதிஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி அலங்காரத்துக்கு மேல் நிதிமன்ற அனுமதி.

திருக்கேதிஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி அலங்காரத்துக்கு மேல் நிதிமன்ற அனுமதி.

1 minutes read

பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதிஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மாந்தை திருக்கேதீச்சர வீதியில் தற்காலிக அலங்கார வளைவானது கேதீச்சரம் சிவத் தொண்டர்களால் இன்று புதன்கிழமை (19) காலை    அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் சிவராத்திரி தினத்தன்று  உடைக்கப்பட்ட குறித்த அலங்கார வளைவு தொடர்பாக மன்னார் நீதி மன்றத்தில் வழக்கு விசாரனை இடம்பெற்று வந்தது. இதே வேளை திருக்கேதீச்சர நிர்வாகம் கடந்த 6ஆம் திகதி இந்த வருடம் சிவராத்திரி விழாவை சிறப்பாக அனுஸ்டிப்பதற்காக ஏற்கனவே வளைவு இருந்த இடத்தில் தற்காலிக வளைவு அமைப்பதற்கு   நீதி மன்றில் சட்டத்தரணி ஊடாக அனுமதி  கோரி இருந்தனர்.

அதற்கமைவாக மன்னார் மேல் நிதிமன்றத்தால்   இன்று புதன்கிழமை (19) ஆம் திகதி எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை  23 ஆம் திகதி வரையான  5 நாட்களுக்கு  வளைவு அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.அதற்கமைவாக இன்றைய தினம் புதன்கிழமை காலை குறித்த தற்காலிக அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.