செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இன்றைய வானிலை அறிக்கை.

இன்றைய வானிலை அறிக்கை.

1 minutes read

கிழக்கு, ஊவா மற்றும் மத்தியமாகாணங்களில் இன்று (பெப்ரவரி 20ஆம் திகதி) மாலையிலிருந்து அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் தற்காலிகமாக சற்று அதிகரிக்கும் என  எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, ஊவா மற்றும் மத்தியமாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவுமாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும்மாத்தறைமாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பதுளை, மாத்தளை மற்றும் நுவரெலியாமாவட்டங்களில்சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கடல் நிலை:

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளும் மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாககொழும்பு வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.