Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எதிர்வரும் இரண்டு நாட்கள் மழையுடனான காலநிலை!!

எதிர்வரும் இரண்டு நாட்கள் மழையுடனான காலநிலை!!

1 minutes read

தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.2020 மே 14ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு2020 மே 13ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தென் மாகாணத்திலும் களுத்துறைமாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும்களுத்துறைமற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More