செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சஜித்,ரணில் தரப்புக்கு அளிக்கப்படும் வாக்குகள் வீணானவை…

சஜித்,ரணில் தரப்புக்கு அளிக்கப்படும் வாக்குகள் வீணானவை…

0 minutes read

சஜித் தரப்பு மற்றும் ரணில் தரப்புக்கு அளிக்கப்படும் வாக்குகள் வீணானவையாகவே அமையும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் முத்தையா பிரபாகரன் தெரிவித்தார்.

மேலும்,‘மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுப் பிரச்சினை என்பது பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தளவான வீடுகளே கட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு நடக்குமானால் வீட்டுத் திட்டத்தை முடிப்பதற்கு பல ஆண்டுகள் எடுக்கலாம். எனவேதான் ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் இவை இடம்பெறவேண்டும் என நாம் கோரிக்கை விடுத்து வருகின்றோம். அவ்வாறு நடைபெற்றால் நிச்சயம் மாற்றம் வரும்.

ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு மட்டுமல்லாது, மலையக மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களும் அவசியமாக உள்ளது. சுயதொழில் வாய்ப்பு உட்பட மேலும் பல விடயங்கள் ஊடாக வருமானத்தை அதிகரித்துக்கொள்ளும் வழிமுறைகள் பற்றி ஆராயவேண்டும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.