வசந்தபுரம் வீட்டுத்திட்டங்களிற்கான மீதி பணம் விரைவில் பெற்றுத்தரப்படும்

வசந்தபுரம் வீட்டுத்திட்டங்களிற்கான மீதி பணம் விரைவில் பெற்றுத்தரப்படும் என கிராமிய வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்றையதினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவையும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதனையும் குறித்த பகுதிக்கு சென்று, விடயங்களை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தரவு பிறப்பித்தார்.

பொம்மைவெளி பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம் தொடர்ச்சியாக காணப்படுவதாகவும், தமக்கான வீடமைப்பு திட்டத்தை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி அந்த பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் ஒன்று மேற்கொண்டுடிருந்ததுடன் அங்கு சென்று குறித்த பிரச்சினை தொடர்பாகவும் ஆராய்ந்தார்

ஆசிரியர்