நாட்டில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி (இன்றுமட்டும் 24) மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,219
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 24 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 219 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 15 கட்டாரில் இருந்தும் 02 பேர் மாலைதீவில் இருந்தும் ஐக்கிய அரபு இராஜ்யத்தில் இருந்தும் உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தலா ஒருவரும் இதில் அடங்குவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 211பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த தொற்றிலிருந்து 2 ஆயிரத்து 996 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 49 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளதோடு இலங்கையில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.