செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

0 minutes read

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, சிறுநாவற்குளம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளம் குடும்பஸ்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த வீதியூடாக மோட்டார் சைக்கிளில் மன்னார் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் நின்ற பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் குறித்த நபரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செட்டிகுளத்திற்கு மரண சடங்கொன்றிற்கு சென்றுவிட்டு மீண்டும் மன்னார் நோக்கி வீடு திரும்பியபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இருவரும் மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளை திருமணம் செய்த 36 மற்றும் 38 வயது இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், விபத்து தொடர்பாக மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.