செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல்!

மீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல்!

0 minutes read

இலங்கையில் நேற்று (புதன்கிழமை) இரவு 10.00 மணி முதல் மீளவும் பயணக்கட்டுப்பாடு அமுலாகியுள்ளது.

இந்த பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணி வரையில் தொடரவுள்ளது. அதனைத் தொடர்ந்து, நாட்டில் பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது குறித்து இதுவரையில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து, தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய செயற்படுமாறு பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கோரியுள்ளார்.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகின்றவர்கள் மாத்திரம் வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொலிஸாரினால் நடமாடும் மற்றும் உந்துருளி கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எவ்வாறிருப்பிளும் எவரேனும் ஒருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்றபட்டால், அருகிலுள்ள வைத்தியசாலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், மனிதாபிமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காகவும் வெளியே செல்ல முடியும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.