செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற உத்தரவில் விடுதி முற்றுகை!

யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற உத்தரவில் விடுதி முற்றுகை!

1 minutes read

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் உள்ளடங்களாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் நீதிமன்றின் அனுமதி பெற்று இன்று(வெள்ளிக்கிழமை) முன்னெடுத்த விடுதி முற்றுகையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

“நல்லூர் யாழ்ப்பாணம் – கோயில் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்தன. அதுதொடர்பில் விடுதியைச் சோதனையிடுவதற்கான அனுமதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பெறப்பட்டது.

இன்று முற்பகல் விடுதியைச் சோதனையிட்ட போது மாறுபட்ட தகவல்களை வழங்கிய இளைஞர்கள் மூவரும் இரண்டு இளம் பெண்களும் அங்கு இருந்தனர். விடுதி உரிமையாளரும் மாறுபட்ட தகவல்களை வழங்கினார். அதனால் அவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

குருநகர் மற்றும் மானிப்பாயைச் சேர்ந்த 21,24 வயதுடைய இளம் பெண்களே கைது செய்யப்பட்டனர். இளைஞர்களில் ஒருவர் உரும்பிராயைச் சேர்ந்தவர் ஏனைய இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் சந்தேக நபர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.” எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.