செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!

யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!

1 minutes read

தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கு அமைய யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் யாழ்.மாவட்ட லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து இரத்ததான முகாமொன்றை யாழ்.மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று(வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு குறித்த இரத்ததான முகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட மக்கள் உயிர்க்காக்கும் இரத்ததான நிகழ்வில் பங்குபற்றுமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் யாழ் மாவட்ட லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த இரத்ததான நிகழ்வில் கலந்துக்கொள்ள விரும்புவோர் கீழுள்ள தொலைபேசி இலக்கத்துடன் (077 039 9119) முன்கூட்டியே தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் யாழ் மாவட்ட லயன்ஸ் கழகம் ஆகியன மேற்கொள்ளும் என அதன் உறுப்பினர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.