செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்!

வடக்கு மாகாண பிரதம செயலாளர் விவகாரம்!

0 minutes read

வடக்கு மாகாண பிரதம செயலாளர் நியமனத்தில் மாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர், முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாணத்திற்கு புதிய பிரமத செயலாளராக சமன் பந்துலசேன ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் ஒன்றுக்கூடி கலந்துரையாடல் ஒன்றினை இன்று (சனிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர்.

குறித்த கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.