செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ் மாவட்டத்திற்கான அரசாங்க அதிபர் மாற்றம் குறித்து பிரதமருக்கு சம்பந்தன் கடிதம்!

யாழ் மாவட்டத்திற்கான அரசாங்க அதிபர் மாற்றம் குறித்து பிரதமருக்கு சம்பந்தன் கடிதம்!

0 minutes read

யாழ் மாவட்டத்தில் 95% மானவர்கள் தமிழ் பேசும் சமூகத்தினராவர், மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய நிர்வாகத்தினை சேர்ந்தவர்களும் தமிழ் பேசும் சமூகத்தினை சார்ந்தவர்களாவார்கள் என சுட்டிக்காட்டி இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

இந்நிலையில் தமிழ் பேசத்தெரியாத அதிகாரியை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிப்பது பொருத்தமற்றது என்றும் அது ஜனநாயக விரோதமான செயற்பாடு என்றும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான பூர்வீக இடங்களான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய அரசியலமைப்பின் ஊடாக அதியுச்ச அதிகார பகிர்வினை வழங்க அரசாங்கம் முயற்சிகளை எடுக்கும் சந்தர்ப்பத்தில் இத்தகைய செயற்பாடுகள் எதிர்மறையான விளைவினை ஏற்படுத்தும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அத்தகைய பிரேரணையை மீளாய்வு செய்து, மேற்குறித்த விடயங்களை கருத்திக்கொண்டு யாழ் மாவட்டத்தின் அரசாங்க அதிபராக அனுபவமும் செயற்திறனுமுள்ள தமிழ் பேசும் ஒரு அரச அதிகாரியை நியமிக்குமாறு இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.