செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளின் போராட்டம் கட்டுப்பாட்டுக்குள்!

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளின் போராட்டம் கட்டுப்பாட்டுக்குள்!

0 minutes read

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்றின் போராட்டம் காரணமாக ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதிகள் குழுவுக்குப் பிறகு நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் நிறுத்தப்பட்டனர்

நீண்ட கால சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் நேற்று கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம் செய்தனர். சில கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டதுடன் ஏனைய கைதிகளை துன்புறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே தங்களது தண்டனையை குறைக்குமாறு இவ்வாறு கலவரத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் அவர்கள் கூரையில் இருந்து கீழே இறங்க மறுத்துவிட்டதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து, நிலைமையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கட்டுக்கடங்காத வகையில் நடந்து கொண்ட பல கைதிகள் ஒரு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

எவ்வாறிருப்பினும் மேலும் பல கைதிகள் இன்னும் சிறையின் கூரையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.