செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் மாவீரர்தினத்தினை அனுஸ்டிப்பதற்கு 8 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

வவுனியாவில் மாவீரர்தினத்தினை அனுஸ்டிப்பதற்கு 8 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

0 minutes read

தமது பிரிவில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மாவீரர் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியினால் சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கமைய வவுனியா நீதின்றம் குறித்த 8 பேருக்கு தடை உத்தரவினை வழங்கியுள்ளது.

அந்தவகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி அனந்தன், சிவமோகன், காணாமல் போனவர்களின் உறவினர்களின் சங்கத்தினை சேர்ந்த கோ. ராஜ்குமார், கா.ஜெயவனிதா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், கயேந்திரகுமார் அல்லது கயன், சு.தவபாலசிங்கம், செ.அரவிந்தன் ஆகியோருக்கு குறித்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த நபர்கள் வவுனியா பொலிஸ் பிரிவில் எதிர்வரும் 20 ஆம் திகதியில் இருந்து 29 ஆம் திகதி வரை மாவீரர் நிகழ்வை அல்லது அதனுடன் தொடர்புடைய அனைத்து நிகழ்வுகளையும் நிறுத்துவதற்கு கட்டளையிடப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 12மாதம் 6ஆம் திகதி நீதிமன்றில் பிரசன்னமாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.