செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் தைப்பொங்கல் தினத்தில் கைகலப்பு சம்பவங்கள்!

வவுனியாவில் தைப்பொங்கல் தினத்தில் கைகலப்பு சம்பவங்கள்!

0 minutes read

வவுனியாவில் தைப்பொங்கல் தினத்தில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவங்களில் 03 பெண்கள் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றையதினம் மாலை 04.00 மணி தொடக்கம் இரவ 12.00 மணி வரையான காலப்பகுதியிலேயே குறித்த சம்பவங்களில் பதிவாகியுள்ளன.

இவ்வாறு காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 12 ஆண்கள் மற்றும் 03 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவங்கள் வவுனியா பூந்தோட்டம், புளியங்குளம், ஈச்சங்குளம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தககது.

இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணையினை வவுனியா, ஈச்சங்குளம், புளியங்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.