அதிகரிக்கும் இரு கட்டணம்

போக்குவரத்து அமைச்சு வட்டாரங்கள் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைக் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக, தெரிவிக்கின்றன.

மருத்துவச் சான்றிதழ் வழங்குவதற்காக இரத்தம், கண், உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ளும் நிறுவனமான தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் (National Transport Medical Institute), குறித்த சேவைகளை வழங்குவதற்காக கட்டணமாக ரூ. 800 இனை அறவிடுகின்றது.

தற்போது குறித்த தொகையை அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிவதாக தெரிவிக்கப்படுன்றன.

அதற்கமைய, குறித்த சேவைக் கட்டணத்தை 25 – 30% ஆக அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதனை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஆசிரியர்