செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 8 பேர் கைது

புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 8 பேர் கைது

1 minutes read

வெலிமட பகுதியில் அப்புத்தளை வீதியில் புதையல் தோண்டுவதற்கு முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெலிமட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அப்புத்தளை வீதியின் 2 இலக்க கட்டை பகுதியில் வெலிமட பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் சோதனை இடப்பட்டுள்ளது.

இதன்போது புதையல் தோண்டுவதற்காக அதில் பயணித்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் 21,31, 34, 35, 50, 51, 53 மற்றும் 72 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் பன்னிப்பிட்டிய, கோட்டை, கொட்டாவ, ஊரகஸ்மங்ஹந்திய, கொழும்பு-5, ஹோமாகம, வெயாங்கொடை, மற்றும் எதிமலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து ஸ்கேனர் இயந்திரம், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் வெலிமட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் வெலிமட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.