Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ் பல்கலைக் கழகத்தில் தொழில் கண்காட்சி

யாழ் பல்கலைக் கழகத்தில் தொழில் கண்காட்சி

2 minutes read

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத் துறையின் ஏற்பாட்டில் SLASSCOM இன் தகவல் தொடர்பாடல் தொழில் துறை / வாணிபச் செயற்பாட்டு முகாமைத்துவம் சார்ந்த தொழில் கண்காட்சி, கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.

தகவல் தொடர்பாடல் தொழில் துறை / வாணிபச் செயற்பாட்டு முகாமைத்துவம் சார்ந்த தொழில் கண்காட்சியின் போது Wiley Global Technology, CodeGen International Fortude, VitalHub, BCS Technology, SimCentric, 99x மற்றும் Creative Software ஆகிய நிறுவனங்கள் உட்பட நாட்டிலுள்ள 20க்கும் மேற்பட்ட முன்னணி தகவல் தொடர்பாடல் தொழில் துறை / வாணிபச் செயற்பாட்டு முகாமைத்துவம் சார் நிறுவனங்கள் இந் நிகழ்வில் பங்கெடுத்தன.

உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள இறுதியாண்டு மாணவர்களுக்கான வேலைகளைப் பாதுகாப்பதை மையமாகக் கொண்டு தகவல் தொடர்பாடல் தொழில் துறை / வாணிபச் செயற்பாட்டு முகாமைத்துவம் சார் தொழில் கண்காட்சியானது SLASSOM இன் முக்கிய பிராந்திய நிறுவனங்களில் ஒன்றான Northern Chamber of IT (NCIT) உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இந்த நிகழ்வு தகவல் தொடர்பாடல் தொழில் துறை / வாணிபச் செயற்பாட்டு முகாமைத்துவம் சார்ந்த துறையில் உள்ள பல்வேறு தொழில் வாய்ப்புகள் குறித்து இளங்கலைப் பட்டதாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும், வட மாகாணத்தில் நடைபெறவிருக்கும் மிகப் பெரிய தொழில் கண்காட்சிக்கான மாதிரி நேர்காணல்கள் மற்றும் சுயவிபர சேகரிப்புடன் ஒரு தளத்தை உருவாக்கவும் வழி செய்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More