June 2, 2023 1:56 pm

இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு! – கொலை எனச் சந்தேகம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இளம் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கண்டி, அலவத்துகொட பகுதியில் வயல் வெளியிலிருந்து குறித்த பெண்ணின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

26 வயதுடைய தனுகா மதுமந்தி என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் நேற்றிரவு மரண வீடொன்றுக்குச் சென்றுள்ளார். வீடு திரும்பியபோது மனைவி காணாமல்போயுள்ளார்.

இது தொடர்பில் அவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதன்பின்னர் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த பெண் இன்று முற்பகல் வயல் ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்