September 22, 2023 1:10 am

அங்குரார்ப்பண எம்சிஏ பாங்க்-பினான்ஸ் சிக்சஸ் கிண்ணத்தை சுவீகரித்தது சிடிபி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அங்குரார்ப்பண எம்.சி.ஏ. பாங்க் – பினான்ஸ் சிக்சஸ் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் தோல்வி அடையாத அணியாக சிட்டிசென்ஸ் டெவலப்மென்ட் பிஸ்னஸ் பினான்ஸ் (சிடிபி) சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

ஹட்டன் நெஷனல் வங்கி அணிக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதப் போட்டியின் கடைசிப் பந்தில் 4 விக்கெட்களால் வெற்றியீட்டிய சிட்டிசென்ஸ் டெவலப்மன்ட் பிஸ்நஸ் பினான்ஸ் (CDB) அணி, அங்குரார்ப்பண எம்.சி.ஏ. வங்கி – பினான்ஸ் சிக்சஸ் கிரிக்கெட்டில் சம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது.

ஆதீஷ திலக்கரட்ன (34 ஆ.இ.), சானக்க ருவன்சிறி (30) ஆகிய இருவரும் 11 பந்துகளில் பகிர்ந்த 43 ஓட்டங்களும் சானக்க ருவன்சிறி, நிமந்த சுபசிங்க (12 ஆ.இ.) முதலாவது விக்கெட்டில் பகிர்ந்த 43 ஓட்டங்களும் சிடிபி அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

அணிக்கு அறுவர் கிரிக்கெட்டில் ஒரு வீரர் 30 ஓட்டங்களையே அதிகப்பட்சமாக பெறமுடியும். 29 ஓட்டங்களிலிருந்து பவுண்டறி அல்லது சிக்ஸ் அடித்தால் அந்த துடுப்பாட்ட வீரர் ஆட்டம் இழக்காதவராக ஓய்வுபெறவேண்டும். இதற்கு அமைய அந்தப் போட்டியில் இரண்டு அணிகளிலும் தலா ஒருவர் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதால் ஆட்டம் இழக்காமல் அதிகபட்ச ஓட்டங்களுடன் ஓய்வு பெற்றனர்.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹட்டன் நெஷனல் வங்கி 5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 100 ஓட்டங்களைக் குவித்தது.

மாதவ வர்ணபுர 9 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களுடன் ஓய்வுபெற்றார். அவரைவிட சந்துன் வீரக்கொடி 8 பந்துகளில் 21 ஓட்டங்களையும் தருஷ பெர்னாண்டோ 5 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 19 ஓட்டங்களையும் பெற்றனர்.

மாதவ வர்ணபுரவும் சந்துன் வீரக்கொடியும் 16 பந்துகளில் 63 ஓட்டங்கiளைப் பகிர்ந்திருந்தபோது மாதவ ஆட்டம் இழக்காமல் ஓய்வுபெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய CDB 5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 101 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி சம்பியனானது.

அதீஷ திலக்கரட்ன 9 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 34 ஓட்டங்களையும் சானக்க ருவண்சிறி  9 பந்துகளில் 30 ஓட்ங்களையும் மிஷேன் சில்வா 7 பந்துகளில் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

முன்னதாக முதலாவது அரை இறுதியில் அசெட்லைன் பினான்ஸ் அணியை (4.5 ஓவர்களில் 35 – 6 விக்.) சிடிபி அணி (2 ஒவர்களில் விக்கெட் இழப்பின்றி 37) 6 விக்கெட்களால் வெற்றிகொண்டிருந்தது.

மற்றைய அரை இறுதியில் பீப்ள்ஸ் லீசிங் அண்ட் பினான்ஸ் அணியை (5 ஓவர்களில் 51 – 3 விக்.) எச்என்பி அணி (3.5 ஓவர்களில் 55 – 1 விக்.) 5 விக்கெட்களால் வெற்றிகொண்டிருந்தது.

இறுதி ஆட்ட நாயகன், சுற்றுப் போட்டியில் அதிசிறந்த துடுப்பாட்ட வீரர், அதிக சிக்ஸ்களை விளாசிய வீரர் ஆகிய 3 விருதுகளையும் சானக்க ருவன்சிறி வென்றெடுத்தார். சிறந்த பந்துவீச்சாளராக LOLC வீரர் சயுர உடுகும்புர தெரிவானார்.

நிப்பொன் பெய்ன்ட் லிமிட்டட் பிராந்திய முகாமையாளர் டுரோஷன் நாகாவத்த, சிடிபி உறவுகள் முகாமையாளர் லக்ஷான் கருணாதிலக்க, எம்சிஏ தலைவர் நலின் விக்ரமசிங்க, சிரேஷ்ட உதவித் தலைவர் மஹேஷ் டி அல்விஸ், உதவித் தலைவர் சிரோஷ குணதிலக்க ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினர்.

வர்த்தக கிரிக்கெட் சங்கத் தலைவர் நலின் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் சங்க நிருவாகம் இந்த சுற்றுப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தின் 112 வருட வரலாற்றில் எம்சிஏ கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்று எம்சிஏ அரங்குக்கு வெளியே நடத்தப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தின் செயற்பாடுகள் கொழும்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல் வெளி மாவட்டங்களிலும் விஸ்தரிக்கப்படவேண்டும் என்பதே நலின் விக்ரமசிங்க தலமையிலான வர்த்தக கிரிக்கெட் சங்கத்தின் நோக்கமாகும்.

இந்த சுற்றுப் போட்டிக்கு நிப்பொன் பெய்ன்ட் லங்கா பிறைவேட் லிமிட்டட், நெஷனல் டெவலப்மென்ட் வங்கி ஆகியன அனுசரணை வழங்கின.

இந்த சுற்றுப் போட்டியில் சிட்டிசென்ஸ் டெவலப்மென்ட் பாங்க், எல் பி பினான்ஸ், ஹட்டன் நெஷனல் வங்கி ஆகியன ஏ குழுவிலும் ஓரியன்ட் பினான்ஸ், யூனியன் வங்கி, அசெட்லைன் லீசிங் ஆகியன பி குழுவிலும் பீப்ள்ஸ் லீசிங், கொமர்ஷல் வங்கி, ஓரியன்ட் பினான்ஸ் ஆகியன சி குழுவிலும் பங்குபற்றின.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதலிடங்களைப் பெற்ற சிடிபி, அசெட்லைன் பினான்ஸ், பீப்ள்ஸ் லீசிங் அண்ட் பினான்ஸ் ஆகிய அணிகளும் ஒட்டுமொத்த நிலையில் அதிசிறந்த 2ஆம் இடத்தைப் பெற்ற ஹட்டன் நெஷனல் வங்கியும் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றன.

படவிளக்கங்கள்


1 பாங்க் – பினான்ஸ் சிக்சஸ் கிரிக்கெட்டில் சம்பியனான சிடிபி அணியினர்.

2 மூன்று விருதுகளை வென்றெடுத்த சானக்க ருவன்சிறி (நீல ரீ ஷேர்ட்)

3 சம்பியனான சிடிபி அணித் தலைவர் மதுஷான் ரவிச்சந்திரகுமார் வெற்றிக் கிண்ணத்தைப் பெறுகிறார்.

4 இரண்டாம் இடத்தைப் பெற்ற ஹட்டன் நெஷனல் வங்கி அணித் தலைவர் மாதவ வர்ணபுர கிண்ணத்தை பெறுகிறார்.

5 இரண்டாம் இடத்தைப் பெற்ற ஹட்டன் நெஷனல் வங்கி அணியினர்.

6 குதூகலத்தில்  சிடிபி   சம்பியன் அணியினர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்