March 31, 2023 7:01 am

இன்று பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் பகுதிகள்:

காங்கேசன்துறையிலிருந்து மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காற்று கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் வீசும் மற்றும் காற்றின் வேகம் மணிக்கு (20-30) கி.மீ.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவுக்கு மிதமானதாக இருக்கும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்