June 7, 2023 7:08 am

10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சதொச விற்பனை நிலையத்தினால் இன்று (24) வெள்ளிக்கிழமை முதல் அமுலாகும் வகையில் 10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய காய்ந்த மிளகாயின் விலை 120 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1380 ரூபாவாகும்.

வெள்ளைப்பூண்டின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 450 ரூபாவாகும்.

நெத்தலியின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1100 ரூபாவாகும்.

கடலையின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 555 ரூபாவாகும்.

உள்ளூர் சம்பா அசிரியின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 199 ரூபாவாகும்.

டின் மீனின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 520 ரூபாவாகும்.

பெரிய வெங்காயத்தின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 119 ரூபாவாகும்.

உள்ளூர் உருளை கிழங்கின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 270 ரூபாவாகும்.

வெள்ளை சீனியின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 210 ரூபாவாகும்.

பட்டாணி பருப்பின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 298 ரூபாவாகும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்