June 7, 2023 6:19 am

பால் தேநீரின் விலை நாளை முதல் குறைகிறது!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ரு கோப்பை பால் தேநீரின் விலை நாளை  (27) முதல் 90 ரூபாயாக குறைக்கப்படுகிறது என   உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், பால்மாவின் விலை குறைவடைந்துள்ளதை பயன்படுத்தி மக்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, 100 ரூபாயாக இருந்த ஒரு கோப்பை பால் தேநீரை 10 ரூபாய் குறைந்த விலையில் நாளை முதல் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் கிலோ ஒன்றுக்கு 200 ரூபாயாலும், 400 கிராம் ஒன்றின் விலை 80 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் அண்மையில் தெரிவித்துள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்