Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தொடர் வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபா

தொடர் வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபா

1 minutes read
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 333.49 ரூபாவாகவும், கொள்வனவு விலை 315.70 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

தொடர் வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபா | Sri Lanka Rupee And Dollar Rate Today
இந்தநிலையில் நேற்றுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றுடன் ஒப்பிடும் போது, யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியிலும் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது. இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 363.13 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 343.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 412.24 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 389.91 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
Gallery

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More