Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை குருந்தூரில் மலை | வலிதான கட்டளை ஒன்றை நீதிமன்றம் வழங்க வேண்டும்

குருந்தூரில் மலை | வலிதான கட்டளை ஒன்றை நீதிமன்றம் வழங்க வேண்டும்

2 minutes read

குருந்தூர்மலை பிரதேசத்திற்கு நீதவான் நேரில் விஜயம் மேற்கொண்டு அங்கு கட்டுமானங்கள் இடம்பெறுகின்றனவா என்பதை பார்வையிட்டு வலிதாக பிணிக்கும் கட்டளையை  வழங்கவேண்டும் என  ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தினர் நீதிமன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினர்சார்பில் 02.03.2023அன்று நீதிமன்றில் மன்றில் முறையீடு ஒன்று செய்யப்பட்டது.

இந்நிலையில் குருந்தூர்மலை விவகாரத்தில் அவ்வாறு நீதிமன்றக்கட்டளை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்பினர் 30.03.2023 ஆம் திகதியன்று நீதிமன்றில் தோன்றி தமது அறிக்கைகளை சமர்ப்பிக்கவேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரணராஜா உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய குறித்த வழக்கானது முல்லைத்தீவு 30.03.2023 இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

அந்தவகையில் தொல்லியல் திணைக்களம் சார்பில், தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க உள்ளிட்ட குழுவினரும், பொலிஸாரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் சார்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் உள்ளிட்டவர்கள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது தமது சிரேஸ்ட சட்டத்தரணிகளும், சிரேஸ்ட அலுவலர்களும் நீதிமன்றிற்கு வரமுடியாத காரணத்தினால், தமது விளக்கங்களைச் சமர்ப்பிப்பதற்கு பிறிதொரு தவணையினை வழங்குமாறு பொலிஸாரும், தொல்பொருள் திணைக்களம் சார்ந்தவர்களும் நீதிமன்றிடம் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இந்நிலையில் குருந்தூர்மலைப் பிரதேசத்திலே நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த விகாரைக்குரிய கட்டுமானப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதானது, நீதிமன்றத்தை அவமதித்து இடம்பெறுகின்ற செயற்பாடு என, குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அத்தோடு பொதுமக்கள் நீதிமன்றின் மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கக்கூடியதொரு செயற்பாடு எனவும் இதன்போது ஆலய நிர்வாகம் சார்பான சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை குறித்த குருந்தூர் மலைப் பிரதேசத்திற்கு நீதவான் அவர்கள் நேரடியாக வருகைதந்து அங்கு இடம்பெறும் விடயங்களை பார்வையிட்டு, ஏற்கனவே இருந்த நிலையை விட புதிதாக கட்டடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவா, அல்லது மேம்படுத்தல் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதனைப் பார்வையிட்டு, அதனடிப்படையில் வலிதான பிணிக்கும் தன்மையுடைய கட்டளை ஒன்றினை வழங்கவேண்டுமெனவும் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளால் வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் இருதரப்பு சமர்ப்பணங்களைத் தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் மற்றும், பொலிஸார் அறிக்கைகள் சமர்ப்பிப்பதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி வழக்குத் திகதியிடப்பட்டுள்ளது.

மேலும் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளில் ஒருவரான எஸ். தனஞ்சயன் கருத்துத் தெரிவிக்கையில்,

குருந்தூர்மலைதொடர்பான AR/673/18 என்னும் வழக்கானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே, நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே நீதிமன்றால் வழங்கப்பட்ட இரண்டு கட்டளைகளை மீறி,  நீதிமன்றக்கட்டளைகளை  அவமதிப்பு செய்யும் விதமாக குருந்தூர்மலைப் பிரதேசத்தில் பௌத்த விகாரைக் கட்டுமானங்கள் தொடர்ந்து இடம்பெறுவதை, இதற்கு முந்திய வழக்குத் தவணையில் நீதிமன்றிற்குச் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இந் நிலையில் தொல்பொருள் திணைக்களத்தினரும், பொலிஸாரும், இது தொடர்பில் பதிலளிப்பதற்காக இன்றைய திகதிக்கு இந்த வழக்குத் தவணையிடப்பட்டிருந்தது.

அந்தவகையில் தொல்பொருள் திணைக்களத்தைச் சார்ந்தவர்களும் பொலிஸாரும் மன்றிலே சமூகமாகியிருந்தனர்.

இதன்போது தமது சிரேஸ்ர சட்டத்தரதிகளும், சிரேஸ்ர அலுவலர்களும் நீதிமன்றிற்கு வரமுடியாத காரணத்தினால் பிறிதொரு தவணையினை வழங்குமாறு பொலிஸாரும், தொல்பொருள் திணைக்களம் சார்ந்தவர்களும் நீதிமன்றிடம் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இந்நிலையில் குருந்தூர்மலைப் பிரதேசத்திலே நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த விகாரைக்குரிய கட்டுமானப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது என்ற விடயத்தினை மீண்டும் நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கின்றோம்.

எனவே இச்செயற்பாடு நீதிமன்றத்தை அவமதித்து இடம்பெறுகின்ற செயற்பாடாக கருத முடியும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.

அத்தோடு பொதுமக்கள் நீதிமன்றின் மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கக்கூடியதொரு செயற்பாடாகவும் இதனைக் கருதமுடியுமெனவும் நாம் மன்றிலே எமது சமர்ப்பணங்களைச் செய்திருந்தோம்.

மேலும், குறித்த குருந்தூர் மலைப் பிரதேசத்திற்கு நீதவான் அவர்கள் நேரடியாக வருகைதந்து அங்கு இடம்பெறும் விடயங்களை பார்வையிட்டு, ஏற்கனவே இருந்த நிலையை விட புதிதாக கட்டடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவா, அல்லது மேம்படுத்தல் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதனைப் பார்வையிட்டு, அதனடிப்படையில் வலிதான பிணிக்கும் தன்மையுடைய கட்டளை ஒன்றினை வழங்கவேண்டுமென நாம் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பிலே கேட்டிருக்கின்றோம்.

அந்தவகையில் இந்த வழக்கானது தொல்பொருள் திணைக்களத்தினதும், சம்பந்தப்பட்ட தரப்பினரதும் பதிலுக்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டிருக்கின்றது என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More