September 21, 2023 12:51 pm

ஐ.தே.கவுடன் இணைய சஜித் அணி எம்.பிக்கள் பேச்சு! – ருவான் தகவல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவார்கள். இது தொடர்பில் என்னுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கட்சி அரசியலுக்காகக் காலையில் ஜனாதிபதி ரணிலை விமர்சிப்போர், மாலையில் எம்முடன் பேச்சு நடத்துகின்றனர். தாம் இணைவதற்கு இதுவே சிறந்த தருணம் எனவும் கூறுகின்றனர். இதன்படி அவர்கள் விரைவில் இணைவார்கள் என எதிர்பார்க்கலாம்.

அன்று ‘ரணில் – ராஜபக்ச’ என விமர்சித்தவர்கள் இன்று ‘ரணில் சேர்’ என விளிக்க ஆரம்பித்துள்ளனர்” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்